Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Nestle நிறுவன லாபம் 36 சதவீதம் உயர்வு!

Nestle நிறுவன லாபம் 36 சதவீதம் உயர்வு!

பொட்டலமிடும் பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் வேளாண் விளை பொருட்களின் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 2-வது காலாண்டு நிகர லாபம் 36 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பணவீக்கம் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு சவாலாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லேவின் இந்தியப் பிரிவான நெஸ்லே இந்தியா, கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் ரூ.1,027 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.753 கோடியாக இருந்தது.


நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனீஷ் திவாரி வெளியிட்ட அறிக்கையில், "மூலப் பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார். காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பங்குகள் 7.5 சதவீதம் சரிந்தன.

இந்திய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக பொட்டலமிடும் பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் வேளாண் விளை பொருட்களின் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. எனினும், வரிக் குறைப்புகளும், பொருட்களின் விலை உயர்வும் விற்பனை வளர்ச்சிக்கு உதவியுள்ளன. 

எனினும், நெஸ்லே இந்தியாவின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் உயர்ந்து, ரூ.6,788 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



முந்தைய செய்தி
தீபாவளி ஆவின் இனிப்புகளுக்கு விற்பனை இலக்கு - அமைச்சர் விஜயலட்சுமி தகவல்
அடுத்த செய்தி
11 மாதங்களில் 3% உயர்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

தொடர்புடைய செய்திகள்